அன்புடன் வரவேற்கின்றோம்!
பரந்துபட்ட பாரினிலே ஏழு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் மத்தியில் புலம்பெயர்ந்தும், அகதிகளாக்கப்பட்டும், நாடுவிட்டு நாடு சென்றும் கண்டம் விட்டு கண்டம் கடந்த நிலையில், இதயங்கள் நொருக்கப்பட்டு, விரக்தியிலும், துயரத்திலும் இருக்கும் அத்துடன் வாழ்க்கைக்காக பாதை தெரியாமல் அடுத்த அடியை எங்கே வைப்பது எனத் திகைத்து நிற்கும் அனைத்து தமிழ் நேயங்களுக்கும் பிரயோஜனமாகவும், ஆறுதலாகவும் வழிகாட்டலாகவும் அமைய வேண்டும் என்பதிற்காகவே இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒரு தனிமனிதனாகிய எனக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட சபைக்கோ மாத்திரம் பயனுள்ளதாக இராமல் உலகளாவிய ரீதியில் அனைத்து தனிமனிதர்களுக்கும், தேவ பணியை தேவன் விரும்பும் விதத்தில் செய்ய வேண்டும் என முயற்சிப்பவர்களுக்கும், தவறான கொள்கையில் உள்ளவர்கள் தேவனின் தெளிவான உபதேசத்தில் கட்டப்பட வேண்டும் என்பதும் எனது எதிர்பார்ப்பாகும்.
ஒரு வாலிபனாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட போது, உடலில் ஓடுகின்ற ஒவ்வொரு துளி இரத்தமும் தேவனின் நாமத்தை மகிமைப்படுத்துகின்றதாகவே இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தேன். ஆயினும் வாழ்க்கையின் மகத்தான கேள்விகளான “நாம் எங்கிருந்து வந்தோம்?” “எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?” “கடவுள் ஒருவர் இருக்கிறாரா?” “அப்படி இருப்பாரானால் அவர் என்ன வடிவில் இருக்கிறார்?” “வேதாகமம் உண்மையில் அவரின் வார்த்தைதானா?” “நாம் மரித்த பின்னர் எமக்கு என்ன நடக்கப்போகிறது?” போன்ற கேள்விகளுக்கு பதில் காணமுடியாமலும், வாலிப காலத்தில் தீர்மானம் எடுக்க முடியாமலும் தவித்த சந்தர்ப்பங்கள் இருந்தன.
முதல் தடவையாக 1987ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கும் பணியானது எனது கேள்விகளுக்கும், எனது குடும்பத்தினர், அயலவர்கள், நண்பர்கள், உறவினர்களின் கேள்விகளுக்கும் பதில் வழங்கியதுடன் அது இன்னமும் விருத்தியடைந்து சென்று கொண்டே இருக்கிறது. அந்தக் காலப்பகுதியில் இருந்தே எனக்குப் பயனளித்த அனைத்து புத்தகங்களையும் இலக்கியங்களையும் தமிழில் கொண்டுவர வேண்டும் என்ற கர்ப்ப வேதனையுடனேயே ஒவ்வொரு புத்தகங்களையும் வெளியிட்டு வந்து கொண்டிருக்கிறேன். எனது கேள்விகளுக்கு பதில் பெற்றுக் கொள்ளவும் வாழ்க்கையை மாற்றவும் தேவன் பயன்படுத்திய புத்தகங்கள் உங்களுக்களுக்கும் உதவி செய்வதிற்காக இந்த இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
என்னை ஆண்டவருக்குள் வழிநடத்திய எனது தந்தையாருக்கு நன்றிகூற எனக்கு இந்த பிரதான பக்கத்திலேயே இடம் தாருங்கள். நான் எவ்வாறு இருக்க வேண்டுமென தேவன் எதிர்பார்த்த விதத்திற்கு என்னைக் கொண்டுவருவதிற்கு தேவன் பயன்படுத்தும் எனது குடும்பத்தினர், உறவினர் மற்றும் சபையினருக்கும் நன்றியோடு இருக்கிறேன்.
எப்பக்கத்திலும் என்னை நெருக்கி, உடைத்து, வனைந்து கட்டிய தேவனுக்கே எல்லாப் புகழும் கனமும் மகிமையும் உண்டாவதாக!
இங்ஙனம்,
கிறிஸ்துவின் பணியில்,
அடிமை ஒருவன்.
Articles
தியானங்கள் (Send us a message to get divotions daily)
புத்தகங்கள்
சபை உடன்படிக்கை
AUDIO MESSAGES
சபை சரித்திரம்
அட்டவணையின் விளக்கம்
டாக்டர். ஜே. எம். கரோல் அவர்கள்
எமது ஸ்தாபகரான, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் காலத்தில் இருந்து, 20ம் நூற்றாண்டு வரை, பப்டிஸ்ற் சபைகளின் சரித்திரத்தை விளங்கப்படுத்துவதாகும்.
1. இந்த அட்டவணையினதும் புத்தகத்தினதும் நோக்கமானது, சரித்திரத்தின்படி பப்டிஸ்ற் சபைகளின் இணைப்பு துண்டிக்கப்படாமல் கிறிஸ்துவில் இருந்து அவரின் தீர்க்கதரிசனமான “இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.” என்பது நிறைவேற்றப்பட்டு வருவதைக் காண்பிப்பதாகும் – ஒழுங்கற்ற சபைகளில் இருந்து கத்தோலிக்கம் மற்றும் புரட்டஸ்தாந்துகள் வளர்ச்சியடைந்ததைத் தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது. பப்டிஸ்ற்கள் கத்தோலிக்கத்தில் இருந்து வராததினால், அவர்கள் புரட்டஸ்தாந்துகள் அல்ல.
2. மேலேயும் அடியிலும் உள்ள இலக்கங்கள் 20 நூற்றாண்டுகளுக்கு அடையாளமாகும். முதலாவது குறுக்குக்கோடு கி.பி. 1 ஐயும், இரண்டாவது கோடு, கி.பி. 100 ஐயும் காண்பிக்கிறது, அவை அவ்வாறே தொடர்ந்து செல்கின்றன.
3. அடிப்பகுதியில் உள்ள கிடைக்கோடுகளுக்கிடையே கடந்த வருடங்களிலும் காலங்களிலும் பப்டிஸ்ற்களுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்கள் உள்ளன – நோவேசன்ஸ், மொன்ரானிஸ்ற்ஸ், போலிக்கன்ஸ், வால்டான்சிஸ் போன்ற பெயர்கள் உள்ளன.
4. பப்டிஸ்ற் சபைகளைப் பிரதிநிதிப்படுத்துகின்ற சிவப்பு வட்டங்கள் கிறிஸ்துவின் பூமிக்குரிய ஊழியத்தின்போது கிறிஸ்துவினால் ஸ்தாபிக்கப்பட்ட ஜெருசலேம் சபையில் ஆரம்பிக்கிறது, அந்த சபையில் இருந்தே யூதேயா, அந்தியோகியா சபையும், மற்றைய சபைகளும் வளர்ச்சியடைந்தன. அவர்கள் துன்புறுத்தப்பட்டதை சிவப்பு பிரதிநிதிப்படுத்துகிறது. கசப்பான எதிர்ப்புகளுக்கும் கடுந்துன்பங்களுக்கும் மத்தியில் ஒவ்வொரு காலத்திலும் பப்டிஸ்ற் சபைகளைக் காணலாம். அவர்களுக்கு முதலாவது பட்டப்பெயராக கிறிஸ்தவர்கள் என்றும், பின்னர் அனா-பப்டிஸ்ற் என்றும், தொடர்ந்து வழங்கப்பட்ட பெயர்களையும் காணலாம். இருண்ட காலத்தைக் குறிக்கும் பகுதியையும் நீங்கள் இங்கே காணலாம். இந்தக் காலப்பகுதியில்கூட சபைகளின் இணைப்பு தொடர்ச்சியாக அனா-பப்டிஸ்ற்கள் என அழைக்கப்பட்டுச் செல்வதை நீங்கள் காணலாம். இவர்கள் தொடர்ச்சியான கசப்பான துன்புறுத்தல்களுக்குள்ளாக்கப்பட்டு கத்தோலிக்கர்களால் கொல்லப்பட்டும் இருக்கிறார்கள். 16ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் அனா என்பது அகற்றப்பட்டு சாதாரணமாக பப்டிஸ்ற்கள் என அழைக்கப்பட்டுள்ளார்கள்.
5. கறுப்பு வட்டங்கள் பிழைகள் ஊடுருவப்பட்ட சபைகளைக் காண்பிக்கின்றன – ஆகையால் அவை ஒழுங்கற்ற சபைகள் என அழைக்கப்பட்டுள்ளன. முதலாவது தவறு ஆளுகையில் ஏற்பட்டது – போதகர்கள் கிறிஸ்துவினால் வழங்கப்படாத அதிகாரங்களை தங்களுக்கு எடுத்துக் கொண்டார்கள். பெரிய சபைகளில் உள்ள போதகர்கள் மற்றைய சிறிய சபைகளின் மீது அதிகாரம் காட்டினார்கள். அதுவே 3ம் நூற்றாண்டில், ரோம குருவாட்சியாகியது. எல்லா சபைகளும் பிரதிநிதிகளை அனுப்பி ஒரு சங்கத்தை உருவாக்க வேண்டும் என 313ல் கொன்ரான்ரின் சக்கரவர்த்தி, ஒரு அழைப்புவிடுத்தான். சிவப்பு சபைகள் – அதாவது பப்டிஸ்ற் சபைகள் – இந்த அழைப்பை நிராகரித்தன, ஆயினும் ஒழுங்கற்ற சபைகள் ஒன்றுகூடின. சக்கரவர்த்தி அதற்கு தலைவராக்கப்பட்டான், ஒழுங்கற்ற சபைகள் என அடையாளங் காணப்பட்ட சபைகள் அரசாங்கத்தின் சபையாக்கப்பட்டது. பேதுருவின் வழித்தோன்றல் என லியோ II அதிகாரத்துடன் உரிமைபாராட்டும் வரையில் சக்கரவர்த்தி இந்த சபைகளுக்குத் தலையாக இருந்தான். சபையின் ஆட்சியில் அனுமதிக்கப்பட்ட தவறு எவ்வாறு போப் ஆட்சியைக் கொண்டு வந்தது என்பதைப் பாருங்கள். 16ம் நூற்றாண்டில் புரட்டஸ்தாந்து சபைகள் ரோமன் கத்தோலிக்கத்தில் இருந்து வெளிவர ஆரம்பித்தன. கத்தோலிக்கத்தின் தவறை எதிர்த்தபடியினால் அவர்கள் புரட்டஸ்தாந்துகள் என அழைக்கப்பட்டார்கள்.
6. பப்டிஸ்ற் சபைகள் ஒழுங்கற்ற சபைகளுடன் ஐக்கியங்கொள்ளக் கூடாதென 251ம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்டது. இவர்கள் சிசுக்களுக்கு பப்டிஸம் கொடுப்பதையும், இரட்சிப்புக்கு பப்டிஸம் அவசியம் எனும் தவறான கொள்கைகளை ஏற்க மறுத்தமையால் இவர்களுடைய பழைய பட்டப்பெயரான அனா-பப்டிஸ்ற் என்பது வழங்கப்பட்டது, அதன் அர்த்தமானது திரும்ப பப்டிஸம் கொடுப்பவர்கள் என்பதாகும்.
© பதிப்புரிமை பெறப்பட்டது: பிரதி செய்யக் கூடாது: பைபிள் பப்டிஸ்ற் சபை வெளியீடுகள் © Copyrighted 1931 by Ashland Avenue Baptist Church, Lexington, Kentucky 40502.
IF YOU WANT TO KNOW MORE PLEASE CONTACT US!!!
contact us
Elements
Text
This is bold and this is strong. This is italic and this is emphasized.
This is superscript text and this is subscript text.
This is underlined and this is code: for (;;) { ... }
. Finally, this is a link.
Heading Level 2
Heading Level 3
Heading Level 4
Heading Level 5
Heading Level 6
Blockquote
Fringilla nisl. Donec accumsan interdum nisi, quis tincidunt felis sagittis eget tempus euismod. Vestibulum ante ipsum primis in faucibus vestibulum. Blandit adipiscing eu felis iaculis volutpat ac adipiscing accumsan faucibus. Vestibulum ante ipsum primis in faucibus lorem ipsum dolor sit amet nullam adipiscing eu felis.
Preformatted
i = 0;
while (!deck.isInOrder()) {
print 'Iteration ' + i;
deck.shuffle();
i++;
}
print 'It took ' + i + ' iterations to sort the deck.';
Lists
Unordered
- Dolor pulvinar etiam.
- Sagittis adipiscing.
- Felis enim feugiat.
Alternate
- Dolor pulvinar etiam.
- Sagittis adipiscing.
- Felis enim feugiat.
Ordered
- Dolor pulvinar etiam.
- Etiam vel felis viverra.
- Felis enim feugiat.
- Dolor pulvinar etiam.
- Etiam vel felis lorem.
- Felis enim et feugiat.
Icons
Actions
Table
Default
Name |
Description |
Price |
Item One |
Ante turpis integer aliquet porttitor. |
29.99 |
Item Two |
Vis ac commodo adipiscing arcu aliquet. |
19.99 |
Item Three |
Morbi faucibus arcu accumsan lorem. |
29.99 |
Item Four |
Vitae integer tempus condimentum. |
19.99 |
Item Five |
Ante turpis integer aliquet porttitor. |
29.99 |
|
100.00 |
Alternate
Name |
Description |
Price |
Item One |
Ante turpis integer aliquet porttitor. |
29.99 |
Item Two |
Vis ac commodo adipiscing arcu aliquet. |
19.99 |
Item Three |
Morbi faucibus arcu accumsan lorem. |
29.99 |
Item Four |
Vitae integer tempus condimentum. |
19.99 |
Item Five |
Ante turpis integer aliquet porttitor. |
29.99 |
|
100.00 |